Published : 21 Jan 2025 01:07 PM
Last Updated : 21 Jan 2025 01:07 PM
சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஜன. 31ம் தேதி, “தொழில்முனைவோருக்கான சாட் ஜிபிடி ” ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, சாட் ஜிபிடி-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை இந்த பயிற்சி வகுப்பு வழங்கும்.
இதில், சாட் ஜிபிடி அறிமுகம் மற்றும் ப்ராம்ப்ட் நுணுக்கங்கள், சாட் ஜிபிடி-ன் உதவியுடன் உங்கள் நோக்கம் மற்றும் இலக்குகளை சரியான வழியில் அமைத்தல், செயல்படுத்த கற்பித்தல், மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் உத்திகள், தாக்கம் செய்கிற கான்டென்ட் உருவாக்கவும், வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்தவும் ஏஐ கருவிகளை பயன்படுத்த கற்றுக்கொள்ளுதல், வணிக செயல்திறனை துல்லியமாக கண்காணிக்கவும், சாட் ஜிபிடி-ஐ பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யவும் கற்பித்தல், சவால்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமர்வில், சாட் ஜிபிடி மூலம் தீர்வுகளை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி வழங்கப்படும்.
பங்கேற்பாளர்கள் 100-க்கு மேற்பட்ட செயல்திறன் கொண்ட சாட் ஜிபிடி ப்ராம்ப்ட்டுகளுடன் ஒரு பிரத்யேக மின்புத்தகத்தையும், அன்றாட ப்ராம்ப்ட் வழிகாட்டுதல்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கான ஒற்றுமையான வாட்ஸ்அப் சமூக அணுகலையும் பெறுவார்கள். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை 8072 799 983 , 90806 09808 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த பயிற்சியில் சேர முன்பதிவு அவசியம், பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT