Published : 17 Jan 2025 04:34 PM
Last Updated : 17 Jan 2025 04:34 PM

ஒயிட் காலர் வேலை: 2024 இறுதியில் 9% அதிகரிப்பு!

'ஒயிட் காலர்’ வேலை எனப்படும் மேலாண்மை, நிர்வாகம் சார்ந்த பணியமர்த்தல் நிலவரம் வெளியாகியுள்ளது. 2024 டிசம்பருடன் முந்தையை ஆண்டை ஒப்பிடுகையில் 9% இந்தப் பணியமர்த்தல் அதிகரித்துள்ளதாகப் புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

இதுகுறித்து நௌக்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 இல் சற்று சுணக்கமாக இருந்த ஒயிட் காலர் வேலைகளுக்கான பணியமர்த்தல் நிலவரம் டிசம்பரில் நல்ல வளர்ச்சியை கண்டது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு குறியீட்டெண் 2,651 புள்ளிகளை எட்டியது.

2024இன் முடிவில் முக்கிய பெருநகரங்களில் வேலை வாய்ப்பு வளர்ச்சி 10% எட்டியது. அதுவும், செயற்கை நுண்ணறிவு & இயந்திர கற்றல் துறையில் 36%, எண்ணெய் & எரிவாயு துறையில் 12%, மருத்துவத்தில் 12%, வேகமாக நகரும் நுகர்வுப் பொருட்கள் துறைகளில் (Fast-Moving Consumer Goods) 12%ஆகப் பதிவாகி இருக்கிறது.
மேலும் 2024 இறுதியில், புதியவர்களுக்கான வேலைவாய்ப்பு 6% அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக லைஃப் ஸ்டைல் சார்ந்த துறையில் 39% ஆக உள்ளது“ என நெளக்ரி தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, 2024 அக்டோபரில் ஒயிட் காலர் வேலை பணியமர்த்தல் சதவீதம் அதிகரித்தைக் காண முடிந்தது. குறிப்பாக டிசம்பரில் வலுவான வளர்ச்சியை எட்டியது. அதன்படி சென்னையில் 35%, பெங்களூருவில் 21 %, கோவையில் வியப்பளிக்கும் வகையில் 14% எனப் பதிவாகியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x