Published : 06 Jun 2024 08:39 PM
Last Updated : 06 Jun 2024 08:39 PM
சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்த மாணவர்கள், தமிழகத்தில் ஓராண்டு பயிற்சி பெற விரும்பினால், அதற்கான உரிய ஆவணங்களை சமர்பிக்குமாறு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்த மாணவர்கள், உள்நாட்டில் ஓராண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். இந்த பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், அங்கீகார சான்று, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் தடையில்லா சான்று உள்ளிட்ட சான்றுகளுடன், மருத்துவ கல்வி இயக்கத்தில் வரும் 20-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக நாட்களில், மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் தரைதளத்தில் அமைந்துள்ள உதவி மையத்தில் சமர்பிக்கலாம் என்றும், மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT