Published : 02 Apr 2024 05:33 AM
Last Updated : 02 Apr 2024 05:33 AM
சென்னை: அரசுப் பள்ளிகளில் 1,768 இடைநிலை ஆசிரியர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்.9-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மார்ச் 15-ம் தேதி முடிவடைந்தது. இதற்கிடையே, விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 26,506 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
இதனிடையே, அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதால், பணி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT