Published : 02 Jan 2023 07:55 PM
Last Updated : 02 Jan 2023 07:55 PM
புதுடெல்லி: பயணிகள் போக்குவரத்தின் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில, 71 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், "2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை பயணிகள் போக்குவரத்தின் மூலம் ரயில்வே 71 சதவீதம் அதிகமாக ரூ.48,913 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.28,569 கோடி ஈட்டியிருந்தது.
2022 ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்து ரூ.59.61 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை ரூ.56.05 கோடியாக இருந்தது.
2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முன்பதிவு செய்த பயணிகள் மூலம் 46 சதவீதம் அதிகமாக ரூ.38,483 கோடி ஈட்டியது. அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.26,400 கோடி ஈட்டியிருந்தது.
2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முன்பதிவு இல்லா பயணச்சீட்டு பயணிகளின் எண்ணிக்கை 137 சதவீதம் அதிகரித்து ரூ40,197 லட்சமாக இருந்தது. இது அதன் முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கை 16,968 லட்சம் ஆக இருந்தது.
2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முன்பதிவு இல்லா பயணச்சீட்டு பயணிகள் மூலமான வருவாய் 381 சதவீதம் அதிகரித்து ரூ.10,430 கோடியாக இருந்தது. இது அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,169 கோடி அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT