Published : 25 Oct 2022 07:43 PM
Last Updated : 25 Oct 2022 07:43 PM
இந்தியாவில் தீபாவளி திருநாள் கொண்டாட்டம் களை கட்டிய நிலையில், பூமியின் ஈரமான பகுதி என அறியப்படும் சிரபுஞ்சியில் வாழ்ந்து வரும் மக்களின் தீபாவளி கொண்டாட்டத்தை கண் முன்னே காட்சிப்படுத்துகிறது ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் புரோமோ வீடியோ. சுமார் 2.50 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த வீடியோ.
சிரபுஞ்சி என்ற பின்னணி குரல் ஒலிக்க கொட்டும் வான் மழையுடன் தொடங்குகிறது இந்த வீடியோ. கார்காலம், கோடை காலம், குளிர்காலம் மட்டுமல்ல தீபாவளி தினத்திலும் இங்கு மழைதான். சிரபுஞ்சியில் தீபாவளி கொண்டாட்டம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இங்கு சில சிரமங்கள் உள்ளன. ஆனால், அது அனைத்தும் ரொம்பவே வேடிக்கையாக இருக்கும். சில நேரங்களில் வான் மழை வெல்லும், சில நேரங்களில் நாங்கள் என நீள்கிறது அந்த வாய்ஸ் ஓவர்.
நமத்து போன வத்திப்பெட்டி, மழையில் கலைந்து போன் வண்ண கோலம், சறுக்கும் பாதைகள், கொளுத்த முடியாத மத்தாப்பு, ராக்கெட், சிறுவர்களின் விரக்தி என நீள்கிறது இந்த வீடியோ.
என்னதான் மழை எங்களிடம் இருந்து கொண்டாட்டத்தை பறித்துக் கொண்டாலும் எங்கள் குடும்பத்தினருடனான இனிய பொழுதை அதனால் ஒருபோதும் எடுத்துக் கொள்ளவே முடியாது என்கிறது அந்தக் குரல். இறுதியில் டிவியில் நெட்ஃப்ளிக்ஸ் மூலம் ‘நாட்டு கூத்து’ பாடல் பிளே செய்யப்படுகிறது. அதற்கு மொத்த குடும்பமும் நடனமாடி மகிழ்கின்றனர். ‘தீபாவளி என்றாலே ஹவுஸ்-ஃபுள் தான்’ என இந்த வீடியோ நிறைவு பெறுகிறது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் புரோமோதான் இது. இருந்தாலும் இந்த கிரியேட்டிவ் வீடியோ நெட்டிசன்களின் மனதை வென்றுள்ளது.
In a nutshell it's commendable and awesome indeed
— Neha Sharma (@NehaSharma_3215) October 25, 2022
Cherrapunji Ki Diwali pic.twitter.com/TuaPSU7Qdx
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT