Published : 28 Jun 2014 10:53 AM
Last Updated : 28 Jun 2014 10:53 AM
$ மெக்கென்ஸி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.
$ மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், ஜம்னாலால் பஜாஜ் நிர்வாக கல்லூரியில் நிர்வாகப் பட்டமும் (நிதி) பெற்றவர்.
$ படித்து முடித்த உடன் 1994-ம் ஆண்டு மெக்கென்ஸி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். மெக்கென்ஸி நிறுவனம் அந்த சமயத்தில் இந்தியாவில் துவங்கப்பட்டது. 19-வது நபராக அங்கு சேர்ந்தார்.
$ ஐந்து வருடங்களில் மெக்கென்ஸி நிறுவனத்தின் பங்குதாரார் ஆனார். 39 வயதில் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
$ நிர்வாக கல்லூரியான ’இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ்’ துவங்குவதில் இவரது பங்களிப்பு அபரிமிதமானது.
$ இந்திய ஐ.டி மற்றும் பி.பி.ஓ துறையில் இருக்கும் சில நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர். ஆந்திரப்பிரதேச அரசின் ஐ.டி. கொள்கையை வகுப்பதில் இவர் முக்கிய பங்காற்றியதாக ஒரு தகவலும் உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT