Published : 19 Jun 2014 11:08 AM
Last Updated : 19 Jun 2014 11:08 AM
$ யூ டியூப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. பிப்ரவரி 2014-ம் ஆண்டு முதல் இந்த பதவியில் இருக்கிறார்.
$ 2011-2014-ம் ஆண்டு வரை கூகுள் நிறுவனத்தின் துணைத்தலைவராக (விளம்பரம் மற்றும் வணிகம்) இருந்தார்.
$ 1999-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் 16-வது பணியாளராக சேர்ந்தார். அதற்கு முன்பு இன்டெல், பெயின் அண்ட் கம்பெனி ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார்.
$ ஹார்ர்ட் பல்கலைக்கழகத்தில் ஹானர்ஸ் பட்டமும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், ஆண்டர்சன் பிஸினஸ் கல்லூரியில் எம்.பி.ஏ.பட்டமும் முடித்தவர்.
$ கூகுள் இமேஜஸ், கூகுள் புக்ஸ் உள்ளிட்ட புராடக்ட்கள் இவரது தலைமையில் கொண்டுவரப்பட்டன. மேலும், கூகுள் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருந்தபோது அனல்டிக்ஸ், அட்வர்டைசிங் உள்ளிட்ட பலவிஷயங்களை இவர் கவனித்து வந்தார்.
$ போர்ப்ஸ் பத்திரிகையின் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார். சமீபத்திய இடம் 12.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT