Published : 22 Aug 2015 10:10 AM
Last Updated : 22 Aug 2015 10:10 AM

பிசினஸ்லைன் நடத்தும் போக்குவரத்துத் துறையினர் பங்கேற்கும் கருத்தரங்கு: நாமக்கல்லில் ஆகஸ்ட் 29-ம் தேதி நடக்கிறது

நாமக்கல்லில் போக்குவரத்துத்துறையினர் பங்கேற்கும் கருத்தரங்கு இம்மாதம் 29-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கிற்கு தி ஹிந்து பிசினஸ்லைன் ஏற்பாடு செய்துள்ளது.

போக்குவரத்துத்துறையில் குறிப்பாக லாரி போக்குவரத்து, சரக்குகளைக் கையாள் வது, கிட்டங்கி வசதி உள்ளிட்டவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.

இத்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விவாதித்து அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கான வழிகளை ஆராய்வது இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாகும். போக்குவரத்துத் துறையினருக்கு பிரதான தேவையான எரிபொருளை அளிக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துகளை வழங்க உள்ளனர்.

இதேபோல லாரி போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் அசோக் லேலண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை அளிக்க உள்ளனர். போக்குவரத்துத் துறையினர் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் இதில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கருத்தரங்கில் ஐஓசி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மூர்த்தி பங்கேற்று, தங்கள் நிறுவனம் லாரி போக்குவரத்துக்காக கொண்டு வந்துள்ள புதிய மசகு எண்ணெய் உள்ளிட்ட விவரங்களை அளிக்க உள்ளார்.

இதேபோல அசோக் லேலண்ட் நிறுவனத் தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி டாக்டர் என். சரவணன் தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள வர்த்தக வாகனங்களின் விவரம் மற்றும் அதன் செயல்பாடுகளை விளக்குவார்.

அத்துடன் பங்கேற்போரின் கேள்வி களுக்கு பதிலளிக்கவும் இக்கருத்தரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள ஓட்டல் கோஸ்டல் ரெஸிடென்ஸியில் இந்த கருத்தரங்கு நடக்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x