Published : 01 Feb 2020 01:18 PM
Last Updated : 01 Feb 2020 01:18 PM

மத்திய பட்ஜெட்: வருமான வரி குறைப்பு; சலுகை இல்லை

புதுடெல்லி

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் தனிநபர் வருமான வரியை கணக்கிடுவதில் இதுவரை இல்லாத வகையில் புதியமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கணிசமான அளவு வருமான வரி குறைக்கப்பட்டுள்ளபோதிலும், 80 சி உட்பட வரி விலக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது வருமான வரி கணிக்கிடும் முறையிலும் சில மாற்றங்கள் செய்து புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின்படி குறைக்கப்பட்ட வரி விவரம்:

* ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை.

* ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20% சதவீத வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 10% சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

* ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20% வரி வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 15% வரி மட்டுமே வசூலிக்கப்படும்.

* ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு 30% வரி வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 20% வரி மட்டுமே வசூலிக்கப்படும்.

* ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருவாய்க்கு 30% வரி வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 25% வரி மட்டுமே வசூலிக்கப்படும்.

* ரூ.15 லட்சத்திற்கு அதிகமான வருவாய்க்கு தற்போதுள்ளபடி 30% வரி தொடரும்.

இந்த திட்டத்தின்படி வரி அளவு குறைக்கப்பட்டுள்ளபோதிலும் வரி விலக்கு பெறுவதற்கான எந்த சலுகையும் கிடையாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x