Published : 31 Jan 2020 08:33 AM
Last Updated : 31 Jan 2020 08:33 AM
திவான் ஹவுசிங் பைனான்ஸ் என்றழைக்கப்படும் டிஹெச்எஃப்எல் நிறுவனம், ரூ.12,733 கோடியை 80 போலி நிறுவனங்களுக்கு பரி வர்த்தனை செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள் ளது. ஒரு லட்சம் வாடிக்கையாளர் களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்களை தயார் செய்து இந்தப் பெரும் மோசடியில் டிஹெச்எஃப்எல் ஈடுபட்டிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்து உள்ளது.
மிர்ச்சி என்ற மும்பை நிழல் உலக தாதா தொடர்புடைய சொத்து களை வாங்குவது தொடர்பாக டிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கபில் வாத வன் மோசடியில் ஈடுபட்டு இருப்ப தாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த திங்கள்கிழமை அன்று அமலாகத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், டிஹெச்எஃப்எல் நிறுவனம் ரூ.12,733 கோடி அள வில் மோசடி செய்திருப்பதாக பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் அம லாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக டிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் கணக்குகளை சோதனை செய்கை யில் ஃபெயித் ரியால்டர்ஸ், மார்வல் டவுன்ஷிப், ஏபல் ரியா லிட்டி, போஸிடோன் ரியாலிட்டி, ரேண்டன் ரியால்டர்ஸ் ஆகிய 5 நிறுவனங்களுக்கு ரூ.2,186 கோடி கடன் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த 5 நிறு வனங்களும் கபில் வாதவன் கட்டுப்பாட்டில் இருக்கும் சப்லிங்க் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத் துடன் இணைக்கப்பட்டுள்ளன.
டிஹெச்எஃப்எல் நிர்வாக இயக்குநர் கபில் வாதவன், இந்த 5 போலி நிறுவனங்களுக்கு வழங் கிய கடன்களை மறைக்க அந்நிறுவனங்களை சப்லிங்க் என்ற நிறுவனத்தின்கீழ் இணைத்துள் ளார் என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இம்மோசடியில் டிஹெச்எஃப்எல் பங்குதார்களின் தொடர்பு குறித்து தீவிர விசாரணை யில் அமலாக்கத் துறை இறங்கி உள்ளது.
இந்த மோசடி பரிவர்த்தனை 2010 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நடந்துள்ளது. கபில் வாதவன் மற்றும் அவருடைய சகோதரர் தீரஜ் வாதவன் 2010-ம் ஆண்டில் மிர்ச்சியிடமிருந்து மும்பை ஒர்லியிலுள்ள மூன்று இடங்களை ரூ.225 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டனர். இதில் ரூ.111 கோடி டிஹெச்எஃப்எல் தொடர்பில் வழங்கப்பட்டது. தவிர, ரூ.154 கோடி வாதவன் குடும்பத் துக்கு சொந்தமான துபாய் நிறு வனம் வழியே வழங்கப்பட்டது. டிஹெச்எஃப்எல் நிறுவனம் வங்கி கள், முதலீட்டாளருக்கு ரூ.83,873 கோடி கடன்பட்டுள்ளது. இந்நிலை யில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்நிறுவனத்தை ரிசர்வ் வங்கி திவால் நடவடிக்கைக்காக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் (என்சிஎல்டி) அனுப்பியது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT