Published : 12 Jan 2020 09:36 AM
Last Updated : 12 Jan 2020 09:36 AM

மதுரை, ஓசூர் சிறப்பு பொருளாதார மண்டலம்: எல்காட்டுக்கு கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு

புதுடெல்லி

மதுரை மற்றும் ஓசூரில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பணி களை தொடங்குவது தொடர் பாக எல்காட்டுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து உள்ளது. தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (எல்காட்), மதுரை மற்றும் ஓசூரில் சிறப்பு பொருளாதார மண் டலத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதுதொடராக வழங்கப்பட்ட கால அவகாசத்தை மே மாதம் வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது.

ஹெச்சிஎல், சத்யம், செயின்-சிஸ் சாஃப்ட்வேர் உள்ளிட்ட நிறு வனங்கள் இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஏற்கெனவே நிலங்கள் வாங்கிவிட்டன. இந்நிலையில் அந்நிறுவனங்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் கட்டுமான செயல்பாடுகளைத் தொடங்க வேண்டும். அந்தவகையில் கடந்த ஆண்டு மே மாதத்துக்குள் அவை கட்டுமானச் செயல்பாடுளை தொடங்கியிருக்க வேண்டும்.

மே வரை அவகாசம்

இந்நிலையில் அச்செயல் பாடுகள் இன்னும் தொடங் கப்படாதபட்சத்தில் அதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு வரும் மே மாதம் வரை நீட் டித்துள்ளது. அந்நிறுவனங்கள் முழுமையாக தங்கள் செயல்பாடு களை தொடங்கும் வகையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்சிஎல் நிறுவனம், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 60 ஏக்கர் நிலத்தில் ஐடி நிறுவனத்தைக் கட்ட இருப்பது குறிப் பிடத்தக்கது.

தற்போது முதலீடுகள் குறைந்துள்ள நிலையில் சிறப்பு பொருளாதார மண்டத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்தி ருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x