Published : 22 Aug 2015 10:08 AM
Last Updated : 22 Aug 2015 10:08 AM
முதலீட்டாளர்களின் நலன் களை பாதுகாப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக செபி தலைவர் யு.கே.சின்ஹா குறிப்பிட்டார். தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சங்கம் (டிஐஏ) தனது 25 வது ஆண்டு வெள்ளி விழாவை நேற்று சென்னையில் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநர் ஆஷிஷ் குமார் செளகான் மற்றும் செபி தலைவர் யு.கே. சின்ஹா ஆகி யோர் கலந்து கொண்டு உரை யாற்றினர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சின்ஹா முறையற்ற வழிகளில் பணம் திரட்டும் திட்டங்களுக்கு எதிராக செபி தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வருடங்களில் மட்டும் இது போன்ற 250 நிறுவனங்களுக்கு எதிராக செபி நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று குறிப்பிட்டார்.
நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பெண் இயக்குநர் களும் இடம்பெற வேண்டும் என்பதை செபி கட்டாயமாக்கி யுள்ளது. ஆனால் சில நிறுவனங் கள் இன்னும் இதை கடைப் பிடிக்கவில்லை. இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் குறைவான அபராதத்துடன் அதை சரி செய்து கொள்ள கால அவகாசமும் வழங்கியுள்ளது. இந்த காலத்துக்குள் சரி செய்யவில்லை என்றால் அபராதத்தை அதிகரிக்கும் திட்டமுள்ளது.
மேலும் பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சம் 25 சதவீத பொது பங்கு கொண்டிருக்க வேண்டும் என செபி கட்டா யமாக்கியுள்ளது. மேலும் இதை பொதுத்துறை நிறுவனங் களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
முதலீட்டாளர்கள் நலன் களை பாதுகாக்க செபி பல் வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது என்றவர், புதிய நிறுவனங்கள் சட்டம் மற்றும் நிறுவனங்களுக்கான நிர்வாக விதிகள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன என்றார். உதா ரணமாக உலக வங்கி இந்தியா வில் தொழில் தரத்துக் கான புள்ளிகளைக் குறிப் பிடுகிறபோது, ஒட்டுமொத்த மாக சிறப்பாக இல்லை என்கிறது. ஆனால் முதலீட்டா ளர்களை பாதுகாப்பதற்கான தர அளவில் முன்னிலையில் உள்ளது என்று குறிப் பிட்டுள்ளது.
முதலீட்டாளர்களை பாது காப்பதில் 2012 ல் 49 வது இடத்திலும், 2013ல் 34 வது இடத்திலும் 2014ம் ஆண்டில் 7 வது இடத்திலும் இந்தியா உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் பேசியவர் செபியில் பதிவு செய்துள்ள 18 முதலீட்டாளர் கூட்டமைப்பில் தமிழ்நாடு முதலீட்டாளர் கூட்டமைப்பு முன்னோடியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT