Published : 30 Dec 2019 09:16 PM
Last Updated : 30 Dec 2019 09:16 PM
பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 8-வது முறையாக நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) இன்று உத்தரவிட்டுள்ளது
இதன்படி டிசம்பர் 31ம் தேதி நாளை(செவ்வாய்கிழமை)யுடன் காலக்கெடு முடிவுடைய இருந்த நிலையில், வரும் 2020ம் ஆண்டு, மார்ச்31-ம் தேதிவரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று அறிவிக்கை வெளியிட்டது
ஏற்கெனவே இந்த அவகாசத்தை கடந்த செப்டம்பர் 30ம்ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 31-ம் தேதி வரை 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்திருந்தது. இந்த அவகாசம் தற்போது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டிருந்தது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே, குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், , வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.
இதனிடையே, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும்போது, பான் எண்ணுக்குப் பதிலாக ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது மத்திய பொது பட்ஜெட்டில் கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டு இருந்தது
இணைப்பது எப்படி?
1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.
4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.
5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.
6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT