Published : 29 Dec 2019 09:19 AM
Last Updated : 29 Dec 2019 09:19 AM
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகிய பொருளாதார நடவடிக்கைகள் தற்போதைய சூழலில் தேவைதான் என்றாலும், உரிய திட்டமிடல் இல்லாமல் அவசரகதியில் மேற்கொள்ளப்பட்டுவிட்டன என்று நிதி ஆயோக் உறுப்பினர் ராம்கோபால் அகர்வாலா தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டு இருக்கும் மந்தநிலைக்கு பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார். திவால் நடவடிக்கைச் சட்டமும் முறையான திட்டமிடல் இன்றி கொண்டு வரப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கருப்பு பணப் புழக்கம் பொருளாதாரத்தை பாதித்து வந்தது உண்மைதான் என்றாலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை உரிய திட்டமிடலுடன் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறிய அவர், இவையனைத்தும் தன் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார். தற்போது இந்தியா பொருளாதார ரீதியாக கடினமான காலகட்டத்தில் உள்ளது. ஆனால் அது தீவிர நெருக்கடி அல்ல.
2025-க்குள் 5 டிரில்லியன் டாலர் என்பது அடையக்கூடிய இலக்குதான். ஆனால் அதற்கு ஏற்ப நடுத்த வர்க்கத்தினரின் வருவாயை அதிகரிக்க வேண்டும். தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 8% வளர்ச்சி மிக அவசியம் என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT