Published : 23 Dec 2019 10:13 AM
Last Updated : 23 Dec 2019 10:13 AM
தற்போது நிலவி வரும் பொரு ளாதார மந்தநிலையால் அடுத்த ஆண்டு புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாக வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் கடும் இழப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் அவை ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. தவிர, ஊழியர்களின் ஊதியமும் குறைக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் நிறுவனங்கள் வரும் ஆண்டில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2019 முடிந்து 2020-ம் ஆண்டு தொடங்க உள்ளது. ஆனால் வரப் போகிற புதிய ஆண்டில் வேலை வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், நிறுவனங்கள் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதற்குப் பதி லாக, ஏற்கெனவே இருக்கும் ஊழியர்களின் திறனை உயர்த்தும் முயற்சியில் இறங்க இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தவிர, வேலையில் இருப்பவர் களுக்கும் 2020-ல் ஊதிய உயர்வு பெரிதளவில் மேற்கொள்ளப்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘2020-ல் முதலீடுகளும், நுகர் வும் அதிகரிக்கும்பட்சத்தில் வேலை வாய்ப்பு சற்று உயர வாய்ப்பு உள்ளது. பதிலாக, தற்போது நிலவும் மந்தநிலை தொடர்ந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உரு வாக சாத்தியமில்லை’ என்று இந்திய பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் ரிதுபர்னா சக்ரவர்த்தி தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக 2020-ம் ஆண்டில் முதல் காலாண்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு மிகவும் குறைவு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டிசைன் திங்கிங், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி), ரோபோட்டிக் பிராசஸ் ஆட்டோமேசன் (ஆபிஏ) உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் சார்ந்து திறன் கொண்ட நபர்களே நிறுவனங்களுக்குத் தேவையாக இருக்கின்றனர். இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி பெற்று இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலையால் பல்வேறு நிறுவனங் களில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகனத் துறை சார்ந்த பிரிவில் 3.5 லட்சத்துக்கும் மேற் பட்ட ஊழியர்கள் வேலை இழந் துள்ளனர். அதேபோல் ஐடி நிறு வனங்கள் பெரிய அளவில் ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற் கொள்ள இருப்பதாக அறிவித்துள் ளன. தற்போது வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT