Published : 16 Dec 2019 10:27 AM
Last Updated : 16 Dec 2019 10:27 AM

டிசம்பர் 31-க்குள் பான்-ஆதார் இணைப்பு கட்டாயம்: வருமான வரித் துறை அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

வரும் டிசம்பர் 31-க்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

வங்கியில் குறிப்பிட்ட அளவுக்குமேல் பணப்பரிவர்த் தனை மேற்கொள்வதற்கு நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்ட் அவசியம். இந்நிலையில் பணப்பரிவர்த்தனை செயல் பாட்டை மேலும் ஒருங்கிணைப் பதற்காக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பெரும் பாலானோர் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினர். அதைத் தொடர்ந்து பலமுறை அதற்கான காலக்கெடு தளர்த்தப்பட்டது.

செப்டம்பர் 30-க்குள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப் படாவிட்டால், அக்டோபர் 1 முதல் அந்தப் பான் கார்டு செல்லுபடி ஆகாது என்று மத்திய நேரடி வரி வாரியம் எச்சரித்து இருந்தது. ஆனால் அதன்பிறகும் பலர் இணைக்காத காரணத்தினால், மீண்டும் அதற்கான கால அவகாசம் டிசம்பர்-31 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த கால அவ காசம் முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், டிசம்பர் 31-க்குள் அனைவரும் தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண் டும் என்று அறிவித்துள்ளது. பான் கார்டு - ஆதார் எண் இணைப்பை இணையத்தின் வழியேயும் மேற் கொள்ளமுடியும் என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x