Published : 02 Dec 2019 02:44 PM
Last Updated : 02 Dec 2019 02:44 PM
இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் வரும் 2020-ம் ஆண்டில் சராசரியாக 9.2 சதவீதம் அளவிற்கு உயர வாய்ப்புள்ளதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பளம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு செய்து நிறுவனமான கோர்ன் பெர்ரி இதுகுறித்து கூறியுள்ளதாவது:
ஆசிய அளவில் பணவீக்கம் 3.1 சதவீதமாகவும், சம்பள உயர்வு விகிதம் சராசரியாக 5.3 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளோம். இந்திய அளவில் பொருளாதாரம் வலிமையாக உள்ள போதிலும் சம்பள விகிதம் கணிசமாக உயர்த்தப்படாமல் இருப்பதற்கு சர்வதேச சூழலே காரணம் என தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 2019-ம் ஆண்டு தனியார்த்துறை ஊழியர்களின் சம்பள உயர்வு விகிதம் 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது. ஆனால் வரும் 2020-ம் ஆண்டில் இதுசராசரியாக 9.2 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது. எனினும் ஆசிய நாடுகளில் இது அதிகமாக இருக்கும்.
பணவீக்கத்தை பொறுத்தே சம்பள உயர்வு கணிக்கிடப்படுகிறது. வரும் ஆண்டில் உலக அளவில் பணவீக்கம் 2.8 சதவீதமாக இருக்கும் எனவும் அதேசமயம் சம்பள உயர்வு விகிதம் 4.9 சதவீதமாகவும் இருக்கும். இந்தியாவிலும் பணவீக்கத்தின் தாக்கத்தால் சம்பள விகிதங்களில் மாற்றங்கள் ஏற்பட அதிகமாக உள்ளது.
இவ்வாறு அந்தநிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT