Published : 27 Nov 2019 08:58 AM
Last Updated : 27 Nov 2019 08:58 AM

நாடு முழுவதும் சீரான சரக்கு போக்குவரத்துக்கு ஆலோசனை கோருகிறது வர்த்தக அமைச்சகம்

நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து எளிதாக நடைபெற, உரிய ஆலோசனைகளை வழங்குமாறு பிற அமைச்சகங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. புதிய சரக்கு போக்குவரத்து கொள்கை வரைவு மசோதாவுக்கு உருக்கு, கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட அமைச்சகங்கள் தங்களின் ஆலோசனை
களை அளிக்குமாறு வர்த்தக அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து எளிதாக நடைபெறுவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியடையும் என்பதில் வர்த்தக அமைச்சகம் உறுதியாக உள்ளது. மேலும் சரக்கு போக்குவரத்துக்கு ஆகும் செலவு கணிசமாக குறையும் என்றும் கருதுகிறது. புதிய வரைவு கொள்கை சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க வழி வகுப்பதோடு, ஏற்றுமதி பெருகவும் வழிவகுக்கும் என கருதுகிறது.

எத்தகைய செயல் திட்டங்கள் புதிய வரைவு மசோதாவில் இடம்பெற்றால் அது பயனுள்ளதாக இருக்கும் என்று வர்த்தக அமைச்சகம் பிற அமைச்சகங்களை கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய வர்த்தக அமைச்சகத் தின் சரக்கு போக்குவரத்து பிரிவு இந்த வரைவுக் கொள்கையை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் சரக்கு போக்கு
வரத்து கட்டணம் அதிகமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சரக்கு போக்குவரத்து கட்டணம் 13 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை உள்ளது. அதாவது இது 2.5 டிரில்லியன் டாலரை விட அதிகமாகும். இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமான தொகை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சரக்கு போக்குவரத்து கட்டணத்தை வரும் ஆண்டுகளில் 10 சதவீத அளவுக்குக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சரக்கு போக்குவரத்து கட்டணம் அதிகமாக இருப்பதால் உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. அதேபோல சர்வதேச சந்தையில் இந்திய தயாரிப்புகளால் போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது. போட்டிகளை சமாளிக்க சரக்கு போக்குவரத்து கட்டணம் குறைவாக இருக்க வேண்டும். அதேசமயம் உரிய நேரத்தில் சரக்குகள் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைச் சென்று சேர வேண்டும். அப்போது தான் ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை நிர்ணயித்த காலநேரத்தில் ஏற்றுமதி செய்ய முடியும். மேலும் சரக்கு போக்குவரத்து சீராக நடைபெற வேண்டியது அவசியமாகும்.

கடந்த பிப்ரவரி மாதம் வர்த்தக அமைச்சகம் 23 பக்கங்கள் கொண்ட வரைவு கொள்கையை வெளியிட்டது. அதில் ஒருமுனை சரக்கு போக்குவரத்தை எவ்விதம்
சாத்தியமாக்குவது என்பது குறித்த பரிந்துரைகளும் இடம் பெற்றுள்ளன. தேசிய அளவில் இ-சந்தை வசதியை உருவாக்குவது குறித்த ஆலோசனையும் இதில் அடங்கும்.
ஏற்றுமதியாளர்கள் தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எளிமைப்படுத்துவது, அதேபோல இறக்குமதி செய்யப்படும் சரக்கு
களை உரிய காலத்தில் கிடைக்கச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதிக்கான ஆவணங்களை எளிமைப்படுத்
துவது இதில் முக்கியமான பரிந்துரையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x