Published : 20 Nov 2013 10:20 AM
Last Updated : 20 Nov 2013 10:20 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 62.25 ஆக உள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் கண்டுள்ளது.
நேற்று வர்த்தக நேர முடிவின் போது, ரூபாய் மதிப்பு 5 காசுகள் அதிகரித்து 62.36 ஆக இருந்தது. சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில், டாலர் மதிப்பு குறைந்துள்ளதன் எதிரொலியாக ரூபாய் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது.
இதற்கிடையில், மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும்போது, சென்செக்ஸ் 28. 04 புள்ளிகள் குறைந்து, 20, 862. 78 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி, 9.85 புள்ளிகள் குறைந்து 6,193.50 புள்ளிகளாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT