Published : 22 Mar 2014 01:57 PM
Last Updated : 22 Mar 2014 01:57 PM
உதிரி பாக உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் போஷ் நிறுவனம் ஆந்திரம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சோலார் மின் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதே சமயத்தில் இந்த நிறுவனம் எவ்வளவு தொகைக்கு இந்த திட்டங்களை அமைக்கப்போகிறது என்ற தகவலை வெளியிடவில்லை.
இப்போதைக்கு ஒரு மெகாவாட் அமைப்பதற்காக அடிப்படை வேலைகளில் ஈடுப்பட்டிருப்பதாக இந்த நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதற்கிடையே தமிழகத்தில் 5 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள மின் உற்பத்தி நிலையத்தை ஆரம்பித்திருக்கிறது. தன்னுடைய வாடிக்கையாளருக்காக இந்த மின் திட்டத்தை அமைத்திருக்கிறது. இந்த நிலையம் மூலம் 7.6 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி ஆகும்.
இந்தியாவில் இருக்கும் இந்த நிறுவனத்தின் 26,000க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். ஆண்டுக்கு 13,200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனம் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT