Last Updated : 30 Nov, 2013 12:00 AM

 

Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM

அர்விந்த் சுப்ரமணியம் - இவரைத் தெரியுமா?

$ உலகின் முக்கியமான பொருளாதார வல்லுனர்களில் இவரும் ஒருவர். பாரின் பாலிசி என்னும் பத்திரிகை, உலகின் முதல் 100 சிந்தனையாளர்களில் ஒருவர் என்று இவரை குறிப்பிட்டது.

$ இந்தியா டுடே பத்திரிகையும் கடந்த 35 ஆண்டுகளில் முக்கியமான 35 சிந்தனையாளர்களின் வரிசையில் இவரையும் சேர்த்தது.

$ வர்த்தகம், சர்வதேச வளர்ச்சி உள்ளிட்ட பல தலைப்புகளில், உலகின் முக்கியமான பொருளாதார இதழ்களில் இவர் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.

$ இதே போல, வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், எகனாமிஸ்ட், ஃபைனான்ஸியல் டைம்ஸ் உள்ளிட்ட பல முன்னணி பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

$ இந்திய அரசுக்கும் பல கட்டத்தில் இவர் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

$ India's Turn: Understanding the Economic Transformation, Eclipse: Living in the Shadow of China's Economic Dominance உள்ளிட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார்.

$ சென்னையை சேர்ந்த இவர், டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை பட்டமும், ஐ.ஐ.எம். ஆமதாபாத் நிர்வாகவியல் கல்லூரியில் நிர்வாகமும், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x