Published : 18 Oct 2013 11:56 AM
Last Updated : 18 Oct 2013 11:56 AM
ஜெஃப்ரி பிஜோஸ்
#ஒரு நீண்ட பயணம் செல்லும்போது, தன்னுடைய நிறுவனத்துக்கான ஐடியா இவருக்கு உதயமானது. 1994-ம் ஆண்டு தன்னுடைய கரேஜில் அமேஸான் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
#ஆரம்பத்தில் புத்தகங்களை மட்டுமே விற்றுவந்த இந்த நிறுவனம் இப்போது எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், வாட்ச்கள் உள்ளிட்ட பல பொருள்களையும் விற்றுவருகிறார்கள். எலெக்ட்ரானிக் புத்தகங்களை விற்பதற்கு “கிண்டி”-லை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
#இதுவரை பிஸினஸ் டு கஸ்டமர் விற்பனை செய்துவந்த இந்த நிறுவனம் இப்போது கிளவுட் கம்யூட்டிங் உள்ளிட்ட பிஸினஸ் டு பிஸினஸ் சேவைகளையும் செய்கிறது.
#ஆன்லைன் வணிக நிறுவனங்களின் முன்னோடி. இவரின் சொத்து மதிப்பு. ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் அறிக்கைபடி 27.2 பில்லியன் டாலர்கள்.
#100 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையை வாங்கி இருக்கிறார்.
#எகானாமிஸ்ட், ஃபார்சூன், டைம், ஹார்வேர்ட் பிஸினஸ் ரிவ்யூ உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் எதாவது ஒரு வகையில் இவரைக் கௌரவித்திருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT