Published : 26 Dec 2013 11:00 AM
Last Updated : 26 Dec 2013 11:00 AM

இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் குறைந்தது

இன்று காலை வர்த்தக துவக்கத்தின் போது அந்நியச் செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் குறைந்து 61.91 என்ற நிலையில் இருந்தது.

இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலர் தேவை அதிகரித்துள்ளதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகையால் அந்நியச் செலாவணிச் சந்தைக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததாலும், சர்வதேச அளவில் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்துள்ளதாலும், இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்குச்சந்தையில் ஏற்றம்:

வர்த்தக துவக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 26.86 புள்ளிகள் உயர்ந்து 21059.57 புள்ளிகளாகவும், நிப்டி 1.70 புள்ளிகள் உயர்ந்து 6270.10 புள்ளிகளாகவும் இருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x