Published : 20 Mar 2014 12:51 PM
Last Updated : 20 Mar 2014 12:51 PM
coupon விகிதத்திற்கும், சந்தை வட்டி விகிதத்திற்கும் உள்ள இடைவெளியைப் பொறுத்து கடன் பத்திரத்தின் (bond) விலை மாறும். உதாரணமாக, ஒரு கடன் பத்திரம் ரூ100 முக மதிப்பு கொண்டதாக வைத்துக்கொள்வோம். அதன் coupon 10% என்றும், அதன் கால அளவு 10 ஆண்டுகள் என்றும் வைத்துக்கொள்வோம். இப்போது சந்தை வட்டி விகிதமும் ஆண்டொன்றுக்கு 10% என்றால், கடன் பத்திரத்தை வாங்குபவர்கள் அதன் முகமதிப்பான ரூ100 கொடுத்து வாங்குவார்கள். அதாவது, ரூ100 கடன் மீது சந்தையில் பெரும் வட்டியும், bondயில் பெரும் வட்டியும் வருடத்திற்கு ரூ10 தான்.
இதற்கு மாறாக சந்தையில் வட்டி விகிதம் 15% என்று வைத்துக்கொள்வோம். ஆனால், ரூ100 முகமதிப்புள்ள கடன் பத்திரத்தில் ரூ10 தான் வட்டி பணமாக வரும். 15% வட்டிக்கு எவ்வளவு கடன் கொடுத்தால், எனக்கு ரூ10 வட்டி பணமாகக் கிடைக்கும்? (10X100)/15 = 66.67.
அதாவது, 15% வட்டிக்கு ரூ 66.67 கடனாக கொடுத்தால், வருடத்திற்கு ரூ 10 வட்டியாக கிடைக்கும், எனவே, மேலே உள்ள கடன் பத்திரத்தின் விலையும் ரூ 66.67 என்று குறையும். இவ்வாறு கடன் பத்திரத்தின் couponஐ விட சந்தை வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், கடன் பத்திரத்தின் விலை குறைவாகவும்; couponஐ விட சந்தை வட்டி விகிதம் குறைவாக இருந்தால் கடன் பத்திரத்தின் விலை அதிகமாகவும் இருக்கும்.
இவ்வாறும், coupon நிலையாக இருக்க, சந்தை வட்டி விகிதத்திற்கு ஏற்ப கடன் பத்திரத்தின் விலை மாறிக்கொண்டே இருப்பது கடன் சந்தையின் நிலை பற்றி நமக்கு உணர்த்தும். இதில் தெரிந்துகொள்ள வேண்டியது, சந்தையில் வட்டி விகிதம் உயர்ந்தால், கடன் பத்திரத்தின் விலை குறையும், வட்டி விகிதம் குறைந்தால் கடன் பத்திரத்தின் விலை உயரும்.
நீங்கள் கடன் பத்திரத்தில் முதலீடு செய்பவர் என்றால், அதைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்க வேண்டும். ஒரு நாள், அதன் விலை குறைவாக இருந்தால், அன்றைய தினம் வட்டி விகிதம் அதிகம் என்று அர்த்தம். அன்றைக்கு நீங்கள் கடன் பத்திரம் வாங்கினால், அதிக வட்டி விகிதத்திற்கு கடன் கொடுத்துள்ளதாக அர்த்தம். மற்றொரு நாள் கடன் பத்திரத்தின் விலை அதிகமாக இருந்தால், அன்றைக்கு வட்டி விகிதம் குறைவு என்று அர்த்தம். அன்று அதை விற்று, பணத்தை பெறுவது நல்லது, ஏனெனில், குறைந்த வட்டிக்கு நீங்கள் ஏன் பணம் கடனாக கொடுக்க வேண்டும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT