Published : 12 Nov 2013 01:26 PM
Last Updated : 12 Nov 2013 01:26 PM
இது ஒருவிதமான கடன் பத்திரம். பொதுவாக கடன் பத்திரங்களை கடன் கொடுப்பவரும், வாங்குபவரும் எழுதி கையொப்பம் இட்டு அதனைப் பதிவு செய்து வைத்துக்கொள்வார்கள். இவ்வாறான கடன் பத்திரத்தில் கடன் கொடுத்தவர் பெயர், கடன் வாங்கியர் பெயர், கடன் அளவு, வட்டி விகிதம், வட்டி கொடுக்கவேண்டிய காலம்(ஒவ்வொரு மாதமா, வருடமா), கடனை முழுவதும் கொடுக்கவேண்டிய காலம் (எத்தனை மாதம்/வருடம் கழித்து கடன் திருப்பி கொடுக்கப்படும்) என எல்லா விபரங்களும் எழுதப்பட்டிருக்கும்.
இதில் கடன் வாங்கியவர் பணத்தை அல்லது வட்டியை கொடுக்காதபோது மற்றவர் நீதி மன்றம் சென்று அதனை வாங்க முயற்சிக்க வேண்டும். இதில் கடன் வாங்கியவர், கடன் பத்திரத்தில் உள்ள கால முடிவில் கடனை திருப்பிக் கொடுப்பார், அது வரை கடனை கேட்க முடியாது. இந்த சிக்கலை போக்குவதற்காக உருவாக்கப்பட்டது கடன் பத்திரம் எனப்படும் பாண்டு.
Bond என்பது நிலையான அம்சங்களுடன் (standardized features) உருவாக்கப்பட்ட கடன் பத்திரம். இதில் கடன் வாங்குபவரின் பெயரும், கடனின் அம்சங்களும் இருக்கும். இந்த Bond யை யார் வாங்குகிறாரோ அவரே கடன் கொடுத்தவர். இதை கடன் சந்தையில் யார் வேண்டுமானாலும் விற்கலாம். எனவே, கடன் கொடுத்தவருக்கு திடீரென பணம் தேவைப்பட்டால் Bond-ஐ வேறு ஒருவருக்கு விற்று தனது பணத்தை பெறலாம். பாண்டை விற்பதற்கு பங்கு சந்தை போன்ற அமைப்பு தேவைப்படுவதால், இதனை exchange traded instrument என்பர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT