சென்செக்ஸ் 58 புள்ளிகள் உயர்வு; ரூபாய் மதிப்பில் மேலும் சரிவு
மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் 58 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
சர்வதேச மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் நிலவும் சூழலின் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தையிலும் சற்றே ஏற்றம் காணப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் 58.28 புள்ளிகள் உயர்ந்து 19,978.49 ஆக இருந்தது.
தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டியும் 14.55 புள்ளிகள் உயர்ந்து 5,907 ஆக இருந்தது.
இதனிடையே, அன்னிய செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 பைசா சரிந்து ரூ.62.85 ஆக இருந்தது.
சர்வதேச அளவில் ஏற்றுமதியாளர்களிடையே டாலரின் தேவை மிகுதியாக இருப்பதால், ரூபாய் மதிப்பில் தொடர்ந்து வீழ்ச்சி நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
Follow
FOLLOW US
WRITE A COMMENT