Published : 31 Oct 2013 06:42 PM
Last Updated : 31 Oct 2013 06:42 PM
சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.1.46 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
தேச அளவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.15 குறைக்கப்பட்டது. அதேநேரத்தில், டீசல் விலை வழக்கம்போல் லிட்டருக்கு 50 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றம், உள்ளூர் வரி, வாட் வரிக்கு ஏற்ப அந்தந்தப் பகுதிகளில் விலைக் குறைப்பு அமலுக்கு வருகிறது.
அதன்படி, சென்னையைப் பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46 குறைகிறது. தற்போது லிட்டருக்கு ரூ.75.68 ஆக உள்ள பெட்ரோல் விலை, நள்ளிரவு முதல் 74.22 ரூபாயாக இருக்கும்.
சென்னையில் டீசல் விலை 60 பைசா அதிகரிக்கப்படுகிறது. தற்போது லிட்டருக்கு ரூ.56.01 ஆக உள்ள டீசல் விலை, நள்ளிரவு முதல் 56.61 ரூபாயாக இருக்கும்.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது.
இதன் பயனாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.15 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT