Published : 18 Jun 2017 11:14 AM
Last Updated : 18 Jun 2017 11:14 AM
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை ஜூலை 1-ம் தேதியிலிருந்து அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் இப்புதிய வரி விதிப்பு முறையை தள்ளி வைக்க வேண்டும் என்று தொழில்துறை கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது. இதற்கான காரணங்களை சுட்டிக் காட்டி நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு அசோசேம் பொதுச் செயலர் டி.எஸ். ராவத் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் குறிப் பிட்டுள்ள விவரம் வருமாறு:
மறைமுக வரி செலுத்துவோர் அதாவது தொழில்துறையினர் புதிய வரி விதிப்பு முறைக்கு தங்களை மாற்றிக் கொள்வதில் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமே இதற்கான தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு (ஐடி நெட்வொர்க்) இன்னமும் முழுமையாக தயாராக இல்லை என்பதுதான்.
குறிப்பாக ஜிஎஸ்டிஎன் முறைக்கு மாறுவதில் சிரமங்கள் நிலவுகின் றன. இது பற்றிய புரிதல் இல்லாமை யும், அதற்குரிய தொழில்நுட்ப வசதிகள் சரிவர கிடைக்காமையும் தான் முக்கிய காரணமாகும்.
ஏற்கெனவே வரி செலுத்துவோர் அனைவரும் ஜிஎஸ்டி தளத்திற்குள் பதிவு செய்ய முயன்றாலும் அது தொடர்ந்து பராமரிப்பில் இருப்பதாகவே தெரிவிக்கிறது. இதனால் தங்களை பதிவு செய்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற காலதாமதம் காரணமாக தகவல் தொழில்நுட்பம் முழுமையாக சோதித்துப் பார்க்காமலேயே, அதற்குரிய கட்டமைப்பு வசதி இருக்கிறதா என்று புரியாமலேயே இதற்கு மாற வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளோமோ என்ற அச்சம் நிலவுகிறது. தற்போதைய வரி செலுத்தும் முறையிலிருந்து புதிய ஜிஎஸ்டி வரி செலுத்தும் முறைக்கு மாறுவதில் இன்னமும் சிக்கல் நிலவுகிறது. மேலும் குறுகிய கால அவகாசமே உள்ளதால் மாறு வதற்கு பலரும் முயல்வதால் இதற்குரிய சர்வர் பல விண்ணப் பங்களை ஏற்கும் அளவுக்கு விரைவாக செயல்படவில்லை என்று ராவத் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 80 லட்சம் சேவை வரி மற்றும் சேவை வரி, மதிப்பு கூட்டு வரி செலுத்துவோர் உள்ளனர். இதில் 64.35 லட்சம் பேர் புதிய ஜிஎஸ்டி முறைக்கு மாறியுள்ளனர்.
இவ்விதம் மாறுவதற்கான இணையதள நுழைவாயில் ஜூன் 15-ம் தேதியுடன் மூடப் பட்டுள்ளது. இது மீண்டும் 25-ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஜிஎஸ்டிஎன் முறைக்கு மாறியுள்ள வர்த்தகர்கள் இதற்கான சாஃப்ட்வேரில் சில பிரச்சினைகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஜிஎஸ்டிஎன் தலைவர் கருத்து
இதனிடையே ஜிஎஸ்டி நெட் வொர்க் அமைப்பின் தலைவர் நவீன் குமார், இதுகுறித்து கருத்து தெரி விக்கையில் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயா ராக உள்ளது. பதிவுகளை தாங்கும் வகையில் சர்வர் வலுப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இ-வே பில் குறித்த பிரச்சினை இருப்பதாகவும், இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT