Published : 23 Jun 2017 10:37 AM
Last Updated : 23 Jun 2017 10:37 AM

இவரைத் தெரியுமா?- சஷி சேகர் வேம்பட்டி

* மத்திய அரசு அமைப்பான பிரசார் பாரதிக்கு சஷி சேகர் வேம்பட்டி தலைமைச் செயல் அதிகாரியாக ஜூன் மாதம் 4-ம் தேதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

* 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து பிரசார் பாரதி அமைப்பின் இயக்குநர் குழுவில் பகுதி நேர உறுப்பினராக இருந்தவர்.

* இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அமெரிக்க பிரிவின் உத்திகள் வகுக்கும் குழுவில் பத்து ஆண்டு காலம் பணியாற்றியவர்.

* தேசிய டிஜிட்டல் பாதுகாப்பு, இந்தியாவில் பிராட்காஸ்ட்டிங் டெக்னாலாஜீஸ் என்ற புத்தகத்தை எழுதியவர்.

* பிரசார் பாரதி அமைப்பில் நிதி மற்றும் கணக்குகள் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

* என்ஐடிஐ டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

* கார்ப்பரேட் மேனேஜ்மெண்ட், டிஜிட்டல் மீடியா, டெக்னாலஜி கன்சல்ட்டிங் ஆகிய துறைகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x