Published : 30 Jan 2014 10:18 AM
Last Updated : 30 Jan 2014 10:18 AM
இந்தியாவில் கட்டமைப்பு மற்றும் பெட்ரோ ரசாயனத் துறைகளில் முதலீடு செய்யுமாறு சவூதி அரேபியாவுக்கு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவில் முதலீடு செய் யும் வெளிநாட்டு நிறுவனங் களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இச்சலுகை களை சவூதி அரேபியா பயன்படுத் திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இத்துறையில் வளமான எதிர்காலம் உள்ளது என்றும் சுட்டிக் காட்டினார்.
சவூதி அரேபியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்துவிட்டு புதன்கிழமை டெல்லி திரும்பினார். அங்கு சவூதி இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சௌத் மற்றும் தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக டெல்லியில் உள்ள நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சவூதி அரேபிய தொழிலதிபர்கள் இந்தியாவில் கட்டமைப்பு மற்றும் பெட்ரோ ரசாயனத் துறைகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். குறிப்பாக டெல்லி மும்பை இண்டஸ்ட்ரியல் காரிடார் (டிஎம்ஐசி) ஓ பால் பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ், குஜராத் மற்றும் மங்களூரில் பெட்ரோகெமிக்கல் காம்ப்ளக்ஸ், தமிழகத்தில் அமையவிருக்கும் எல்என்ஜி முனையம் உள்ளிட்ட திட்டப்பணிகளில் முதலீடு செய்ய லாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சவூதி அரேபியாவில் நடை பெற்ற 10-வது இந்திய –அரேபிய கூட்டுக் கமிஷன் மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார். இந்த மாநாட்டின்போது சவூதி அரேபிய தொழில்துறை அமைச்சர் தாரிக் அல் ரபியாவை சந்தித்து டெல்லி தீர்மானம் மற்றும் ரியாத் தீர்மானத்தை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இந்தியாவும் சவூதி அரேபியாவும் பரஸ்பரம் தங்களது நாடுகளில் முதலீடு செய்ய தனியாருக்கு அழைப்பு விடுத்தன. அமைச்சர்களிடையிலான சந்திப்பின்போது இரு நாடுக ளிடையிலான வர்த்தக உறவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக எண்ணெய், எரிவாயு, பார்மசூடிக்கல்ஸ், சிவில் விமான போக்குவரத்து உள்ளிட்ட துறை களில் இரு நாடுகளும் இணைந்து செயலாற்றுவது குறித்து பரிசீலிக் கப்பட்டது. இரு நாடுகளின் கூட்டுக் குழு எண்ணெய், எரிவாயு, கனிமவளம் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்தது.
சவூதி அரேபியாவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, தொலைத் தொடர்புத் துறை ஒருங்கிணைப்பு, பன்முக மருத்துவ வசதி உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இரு நாடுகளின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வாய்ப்புகளை ஆராய ஒரு செயல் குழுவை அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT