Last Updated : 15 Nov, 2013 12:00 AM

 

Published : 15 Nov 2013 12:00 AM
Last Updated : 15 Nov 2013 12:00 AM

டாக்டர் ராம் சரண்: இவரைத் தெரியுமா?

#சர்வதேச அளவில் முக்கியமான நிர்வாகவியல் ஆலோசகர்களில் இவரும் ஒருவர். உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவர்.

#பனாரஸ் பல்கலைக்கழகத்தில் என்ஜீனியரிங் படித்த இவர், ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ.யும், பி.ஹெச்.டி.யும் படித்துள்ளார்.

#ஹார்வேர்ட் பல்கலைக்கழகம், கெல்லாக் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ், பாஸ்டன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் பேராசியராக பணியாற்றியவர்.

#இப்போது முழுநேர ஆலோசகராக இருக்கும் இவர், பல சி.இ.ஓ.-க்களை உருவாக்கியவர். பல சி.இ.ஓ-க்களிடம் பணியாற்றியவர்.

#ஜி.இ., டாடா குழுமம், ஆதித்யா பிர்லா குழுமம், வெரிசான், பேங்க் ஆஃப் அமெரிக்கா, டுபாண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.

#Global Tilt, What the CEO Wants You to Know, The Leadership Pipeline, Every Business Is a Growth Business உள்ளிட்ட 15 புத்தகங்களை எழுதி இருக்கிறார். இந்த புத்தகங்கள் 20 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கின்றன.

#மேலும் ஹார்வேர்ட் பிஸினஸ் ரிவ்யூ, பிஸினஸ் வீக், டைம், சீஃப் எக்ஸிகியூட்டிவ் உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

#இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் “டாப் திங்கர் 50” பட்டியலில் 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் இடம் பிடித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x