Published : 25 Oct 2013 12:17 PM
Last Updated : 25 Oct 2013 12:17 PM

பிலிப் காட்லர் - இவரைத் தெரியுமா?

#‘மார்க்கெட்டிங் துறையின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் பிலிப் காட்லர். இப்போது கெல்லாக்ஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில் சர்வதேச மார்க்கெட்ங் துறையின் பேராசியராக இருக்கிறார்.

#சிகாகோ பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி. முடித்தவர். சர்வதேச அளவில் 12 கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார்.

#மார்க்கெட்டிங் துறையில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்களும், பல கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். மார்க்கெட்டிங் சம்பந்தமாக இவர் எழுதிய புத்தகத்தைதான் உலகம் முழுக்க நிர்வாகம் படிக்கும் மாணவர்கள் படிக்கிறார்கள்.

#ஹனிவெல், ஜி.இ., ஐ.பி.எம். பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஃபோர்டு, மோட்டரோலா உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார். மேலும் சில அரசு நிறுவனங்களுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார்.

#உலகம் முழுக்க இருக்கும் பிஸினஸ் சிந்தனையாளர்களில் முக்கியமானவர்.

#இவருடைய 75-வது பிறந்த நாளுக்கு இந்தோனேஷிய அரசாங்கம் தபால்தலை வெளியிட்டு க் கௌரவித்திருக்கிறது.

#‘கம்பெனிக்கு குறைந்த தலைவர்களும், தானாக முடிவெடுக்கும் மேனேஜர்களும் தான் தேவை’ உள்ளிட்ட இவருடைய பல கருத்துகள் மிகவும் பிரபலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x