Published : 24 Mar 2014 11:13 AM
Last Updated : 24 Mar 2014 11:13 AM
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வெளியிட்ட அறிவிப்பில் மாதத்துக்கு 5,500 கோடி டாலர் கடன் பத்திரங் களை சந்தையிலிருந்து திரும்பப் பெறப் போவதாக அறிவித்தது. முன்னர் 6,500 கோடி டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை திரும்பப் பெறப் போவதாக தெரிவித்திருந்தது. இப்போது 1,000 கோடி டாலர் அளவுக்குக் கடன் பத்திரங்களைத் திரும்பப் பெறுவதைக் குறைத்துக் கொண்டுள்ளது. அத்துடன் கடனுக்கான வட்டி விகிதத்தை அடுத்த ஆண்டு தொடக்கத் திலிருந்து உயர்த்தப் போவதாக தெரிவித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கையால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளதாக டாயிஷ் வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் நடவடிக்கையால் இந்தியாவின் வெளிக்கடன் பற்றாக்குறை அதிகரிக்கும், அதேசமயம் இந்தியாவுக்கான அன்னிய முதலீடு வரத்து குறையும். இவையெல்லாம் குறுகிய காலமே நீடிக்கும்.
இருப்பினும் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது மற்றும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது உள்ளிட்ட நடவடிக் கைகள் இந்தியாவில் தொடரும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
``அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் நடவடிக்கை எவ்வித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது,’’ என்று தரச்சான்று நிறுவனம் `கேர்’ தெரிவித்துள்ளது. இந்திய பங்குச் சந்தை மற்றும் அன்னியச் செலாவணி கையிருப்பு ஆகிய விஷயங்களில் அச்சமடையும் நிலை இதுவரை ஏற்படவில்லை. மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பில் மிகப் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் கேர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு டாலருக்கு ரூ. 68.85 தர வேண்டியிருந்த நிலை மாறி இப்போது 12 சதவீத அளவுக்கு ரூபாயின் மாற்று மதிப்பு உயர்ந்துள்ளது. பங்குச் சந்தையிலும் ஏற்றம் காணப்படுகிறது. தேர்தல் முடிந்தபிறகு, இணக் கமான பொருளாதார சீர்திருத் தம் தொடரும் என்றே அன்னிய முதலீட்டாளர்கள் எதிர்பார்க் கின்றனர். இதனால் பங்குச் சந்தை முதலீடுகளும் பெருகியுள்ளன என்று அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளைவிட கடந்த 18 மாத காலத்தில் எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளதாக டாயிஷ் வங்கி குறிப்பிட்டுள்ளது. 2015-ம் நிதி ஆண்டில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக் குறை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் பொதுத் தேர்தல்கள் வந்து போயுள்ளன. ஒவ்வொரு முறையும் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்துள்ளன. என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT