Published : 29 Nov 2013 01:14 PM
Last Updated : 29 Nov 2013 01:14 PM
#சாதாரண கமாடிட்டி வியாபாரத்தை மிகப்பெரிய எஃப்.எம்.சி.ஜி நிறுவனமாக மாற்றியவர் இவர்.
#பாராசூட், ஹேர் அண்ட் கேர், சபோலா, காயா உள்ளிட்ட பல பிராண்டுகளை கொண்டிருக்கும் மாரிகோ நிறுவனத்தின் தலைவர்.
#பாம்பே பல்கலைகழகத்தில் காமர்ஸ் படித்தவர். 1971-ம் ஆண்டு ரூ. 50 லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம், இப்போது சில ஆயிரம் கோடி நிறுவனமாக மாறி இருக்கிறது.
#என்.டி.டி.வி., சி.என்.பி.சி. எர்னஸ்ட் அண்ட் யங் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இவருக்கு விருதுகளை கொடுத்திருக்கிறது.
#மேலும், கேட்பரி நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருக்கும் ஹர்ஷ், இதற்கு முன்பு இன்னும் சில நிறுவனங்களின் இயக்குனர் குழுவில் இருந்திருக்கிறார்.
#தற்போது பிக்கி அமைப்பின் தலைவராக இருக்கிறார். இதை தவிர எஃப்.எம்.சி.ஜி துறை கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார்.
#புதுமையாக யோசிப்பதையும், ரிஸ்க் எடுப்பதையும் நிறுத்தாமல் தொடர்ந்து செய்யவேண்டும் என்று சொல்லும் இவர், 2003-ம் ஆண்டு 'மாரிகோ இன்னொவேஷன் பவுண்டேஷனை' ஆரம்பித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT