Published : 12 Sep 2013 08:37 PM
Last Updated : 12 Sep 2013 08:37 PM
வங்கியிலிருந்து கடன் பெற்றுவிட்டு அதை திரும்ப செலுத்தாமல் இருக்கும் வாடிக்கையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக வங்கிக் கடன் பெற்றவர்கள் தொழில் நசிவு உள்ளிட்ட பல காரணங்களால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறுவர். அவர்கள் கூறும் காரணம் நியாயமமாக இருந்தால் அதை ஏற்று, தொழில் நிலைமை சீரானவுடன் கடனை திரும்பச் செலுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தலாம்.
மாறாக, வங்கிக் கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாமல் இழுத்தடிக்கும் நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இத்தகையோர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யுமாறும் பரிந்துரைத்துள்ளது.
கடன் பெற்றவர்கள் மற்றும் அவருக்கு ஜாமீன் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி பரிந்துரைத்துள்ளது.
அரசு வங்கிகளின் வாராக் கடன் விகிதம் கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 1.55 லட்சம் கோடியாக இருந்தது. இத்தொகை கடந்த ஜூன் மாதத்தில் ரூ. 1.76 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT