Published : 19 Oct 2013 12:08 PM
Last Updated : 19 Oct 2013 12:08 PM
The Coinage Act 1906- ன் படி, இந்திய அரசு ஒரு ரூபாய், அதற்கும் குறைவான காசுகளை வெளியிடுகிறது. Reserve Bank of India Act 1935, படி RBI இரண்டு அதற்கு மேற்பட்ட ரூபாய் தாள்களை வெளியிடுகிறது என்று பார்த்தோம்.
காசுகளைத் தயாரிக்கும் நான்கு தொழிற்சாலைகளை இந்திய அரசும், ரூபாய் தாள் அச்சிடும் இரண்டு தொழிற்சாலைகளை ரிசர்வ் வங்கியும் வைத்துள்ளன. சில சமயங்களில் உள்நாட்டு பண தயாரிப்பு போதவில்லையெனில், அவை வெளிநாடுகளில் தயாரித்து இறக்குமதி செய்யப்பட்டன.
ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசு முடிவெடுத்து ரிசர்வ் வங்கிக்கு அனுமதி அளிக்கும். ரூபாய் தலைகளை வடிவமைப்பதும் இந்திய அரசால் செய்யப்படும்.
எவ்வளவு ரூபாய் தாள்களை வெளியிடுவது என்பதை ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக முடிவெடுக்கும். ஒவ்வொரு வருடமும், பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி, பழைய ரூபாய் தாள்களை மாற்றுவது என பல காரணங்களைக் கொண்டு ரிசர்வ் வங்கி ரூபாய் தாள் வெளியிடும் அளவை நிர்ணயிக்கின்றது.
பணத்தாள்களும், காசுகளையும் நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 18-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் மூலமாக வெளியிடப்படுகின்றன. சில இடங்களில் குறிப்பிட்ட வங்கிகள் ரிசர்வ் வங்கியின் பணத்தை பாதுகாத்து, அதனின் ஆணைப்படி புழக்கத்திற்கு வெளியிடுகின்றன.
பழைய காசுகளையும், ரூபாய் தாள்களும் வங்கிகள் மூலமாக ரிசர்வ் வங்கிக்கு கிடைக்கப்பெறும். இவற்றை சரிபார்த்து, சிலவற்றை மீண்டும் புழக்கத்திற்கும், மீதம் உள்ளவற்றை ரிசர்வ் வங்கி அழித்துவிட்டு, அதற்கு ஈடாக புதிய பணம் வெளியிடப்படும்.
காசுகளையும், ரூபாய் தாள்களையும் புழக்கத்திலிருந்து சிறிது சிறிதாகக் குறைப்பதற்கு ரிசர்வ் வங்கி முயற்சிக்கிறது. இதனால் கள்ள பணத்தை ஒழிக்க முடியும், கருப்பு பணம் உருவாவதும் குறையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT