Published : 18 Sep 2013 04:55 PM
Last Updated : 18 Sep 2013 04:55 PM
செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கொரியாவின் சாம்சங் நிறுவனம் அதிக செயல்பாடுகளைக் கொண்டுள்ள நோட் 3 எனும் உயர்ரக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 49,900 ஆகும். வெறுமனே போனாக மட்டுமின்றி பல்வேறு பயன்பாடுகளுக்கு இதைப் பயன்படுத்தும் வகையில் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில்செயல்படும் இந்த ஸ்மார்ட்போனின் எடை வெறும் 168 கிராம்தான். 5.7 அங்குல திரை, 13 மெகாபிக்சல் கேமரா ஆகியன இதன் சிறப்பம்சம், கருப்பு, வெள்ளை, இளம் சிவப்பு ஆகிய கண்கவர் நிறங்களில் இது வெளிவந்துள்ளது. 3200 எம்ஏஹெச் பேட்டரி 24 மணி நேரம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்கிறது.
இந்நிறுவனம் முதல் முறையாக கையில் அணியக்கூடிய தண்ணீர் புகாத கேலக்ஸி கியரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 22,900 ஆகும். இந்த இரு தயாரிப்புகளும் செப்டம்பர் 25 ம் தேதி முதல் சந்தையில் இந்தியச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.
விற்பனையை அதிகரிக்க நோட் 3 ஸ்மார்ட் போனுக்கு எளிய தவணை முறைத் திட்டத்தையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 3ஜியில் செயல்படும் வகையிலானது நோட் 3 ஸ்மார்ட்போன். இந்த செல்போனில் திருடுபோனால் கண்டறியும் வசதியும் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT