Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM
ஜவுளித்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக 2-ம் கட்டமாக ரூ.240 கோடி நிதியை 10 நாட்களுக்குள் வங்கிகள் மூலமாக தொழில்துறையினருக்கு வழங்கப்பட உள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சாம்பசிவராவ் தெரிவித்தார்.
கோவையில் உள்ள சர்தார் வல்லபாய்படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
நாட்டின் ஜவுளி ஏற்றுமதியை இந்த நிதியாண்டில் 41.5 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 36 கோடி பில்லியன் டாலர் என நிர்ணயிக்கப் பட்டிருந்தது. தற்போது, ஏற்றுமதி இலக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஜவுளி ஏற்றுமதி இலக்கு 41.5 பில்லியனாக உயர்த்தப் பட்டிருந்தாலும், 43 பில்லியன் அளவிற்கு ஜவுளிப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம். தற்போது ஜவுளித்துறையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக 2-ம் கட்டமாக ரூ.240 கோடி வரும் 10 நாள்களுக்குள் வங்கிகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.
இதுவரை வங்களில் விண்ணப்பித்து நிதி உதவி பெறாத நிறுவனங்கள் குறித்து பட்டியல் கோரியுள்ளோம். இதனைப் பொறுத்து கடந்த 2013 செப்டம்பர் மாதம் வரையில் கணக்கெடுத்து நிதியை வழங்க உள்ளோம். முதல்கட்டமாக ரூ.202 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT