Published : 31 Oct 2013 04:21 PM
Last Updated : 31 Oct 2013 04:21 PM

கடனைத் திரும்பச் செலுத்தாதவர் பெயரை வெளியிட என்பிஎப்சி முடிவு

கடன் பெற்றுவிட்டுத் திரும்பச் செலுத்தாதவர்களின் பெயர், புகைப்படங்களை வெளியிடுவதென வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) முடிவு செய்துள்ளன.

வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு அதை நீண்டகாலமாக திரும்பச் செலுத்தாத நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தனி நபர்கள் அவர்களுக்கு கியாரண்டி கையெழுத்து போட்டவர்கள் ஆகியோரது புகைப்படங்களை வங்கிகள் வெளியிடத் தொடங்கியுள்ளன. இதைப் பின்பற்றி முதல் முறையாக டாடா கேபிடல் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனம் புதன்கிழமையன்று இரண்டு பேரது புகைப்படங்களை பத்திரிகையில் வெளியிட்டுள்ளது.

ஜலந்தரைச் சேர்ந்த சமீத் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 15 கோடி கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்தவில்லை. அதன் உரிமையாளர் மற்றும் கியாரண்டி கையெழுத்து போட்டவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கியாரண்டி கையெழுத்து போட்ட நீல் சஹால் மற்றும் சரண்ஜீத் கௌர் ஆகியோரது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் கடனை திரும்பச் செலுத்தவில்லை. இவர்களிடம் பொதுமக்கள் பண பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்று பொது அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

கடன் பெற்றவருக்கு நோட்டீஸ் அனுப்பி 15 நாள்களுக்குள் எவ்வித பதிலும் வராதபட்சத்தில் கியாரண்டி கையெழுத்து போட்டவரது புகைப்படத்தை பத்திரிகையில் வெளியிட ஆர்பிஐ சட்டம் அனுமதிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x