Published : 05 Dec 2013 09:26 PM
Last Updated : 05 Dec 2013 09:26 PM

தொழில் தொடங்க உகந்த நாடு பட்டியலில் இந்தியாவுக்கு 98-வது இடம்

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 'தொழில் தொடங்க சிறந்த நாடுகள்' பட்டியலில் இந்தியாவுக்கு 98வது இடம் கிடைத்துள்ளது.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை நடத்திய சமீபத்திய ஆய்வில், தொழில் தொடங்க சிறந்த நாடுகளை பட்டியலிட்டுள்ளது. இதில் இந்தியாவிற்கு 98வது இடம் கிடைத்துள்ளது. ஏழ்மை, ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஆகியவை, இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிக் (BRIC) பொருளாதார நாடுகள் என அழைக்கப்படும் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஃபோர்ப்ஸ் வெளியுட்டுள்ள பட்டியலில் பிரிக் நாடுகளானா பிரேசில், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தே இந்தியாவும் உள்ளது. 145 நாடுகளை மொத்தமாக ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபோர்ப்ஸ், சொத்து உரிமைகள், புதிய கண்டுபிடிப்புகள், வரிகள், தொழில்நுட்ப வளர்ச்சி, ஊழல், (தனி மனித, வர்த்தக மற்றும் நிதி) சுதந்திரம், தொழில் தொடங்குவதற்கான நெறிமுறைகள், முதலீட்டாளர் பாதுகாப்பு, பங்கு சந்தையின் செயல்பாடு என பல வகையான காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது.

அயர்லாந்து இந்த பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது. தொழில் முனைவோருக்கு ஆகச் சிறந்த சூழலை உடையாதாக கருதப்படும் அயர்லாந்தில் பல ஆண்டுகளாக உலகின் பல பெரிய நிறுவனங்கள் ஆர்வமாக முதலீடு செய்து வருகின்றன. முன்னதாக முதலிடத்தில் இருந்து நியூசிலாந்து, இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஹாங்காங்க், டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள், முறையே 3,4 மற்றும் 5வது இடங்களில் உள்ளன. இதில் டென்மார் மற்றும் ஸ்வீடனில் கல்வி கற்று வேலை செய்பவர்கள் அதிகமாக உள்ளனர். அந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் மற்ற நாடுகளைவிட அதிகமாக உள்ளது.

இந்தியாவைப் பற்றி ஃபோர்ப்ஸ் குறிப்பிடுகையில், "இந்தியா, எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும், வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருக்கிறது. மொத்ததில் பார்க்கும் போது, இந்தியாவின் குறுகிய கால வளர்ச்சி நம்பிக்கை அளிக்கும் விதமாகவே உள்ளது. நாட்டின் ஜனத்தொகையில் பல இளைஞர்கள் இருப்பதால், அரசை சாராமல் சொந்தமாக தொழில் முனைவோர்கள் அதிகம் உள்ளனர். இதோடு, அவர்களின் சேமிப்பும், முதலீடுகளும் ஆரோக்கியமாக உள்ளன. இதனால், சர்வதேச பொருளாதாரத்தில் அதிகமானோர் ஒருங்கிணைந்துள்ளனர்"

"ஆனால், இந்தியாவுக்கு, ஏழ்மை, ஊழல், வன்முறை, பெண்களுக்கு எதிரான பாகுபாடு, பயனற்ற காப்புரிமை சட்டங்கள், போதிய போக்குவரத்து மற்றும் விவசாய வசதிகள் இல்லாமை, விவசாயம் அல்லாத துறைகளில் குறைந்த வேலைவாய்ப்பு, கிராமத்திலிருந்து நகரித்திற்கு இடம்பெயர்பவர்களுக்கான போதிய வசதிகள் இல்லாமை, போதிய உயர் மற்றும் அடிப்படைக் கல்வி இல்லாமை, முறையற்ற மின் உற்பத்தி மற்றும் விநியோகம் என பல நீண்ட கால சவால்கள் உள்ளன" என்றும் ஃபோர்ப்ஸ் விவரித்துள்ளது.

மற்ற காரணிகளின் அடிப்படையில் இந்தியாவின் மதிப்பீடு:

பொருளாதார சுதந்திரம் - 128வது இடம், புதிய கண்டுபிடிப்புகள் - 39-வது இடம், சொத்து உரிமைகள் - 55-வது இடம், தொழில்நுட்பம் - 94-வது இடம், முதலீட்டாளர் பாதுகாப்பு - 32-வது இடம், ஊழல் - 86-வது இடம், தன்மனித சுதந்திரம் - 58-வது இடம், வரிச் சுமை - 122-வது இடம், பங்கு சந்தை செயல்பாடு - 75-வது இடம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x