Published : 04 Dec 2013 09:30 AM
Last Updated : 04 Dec 2013 09:30 AM
உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் 9-வது கூட்டம், இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் செவ்வாய்க் கிழமை தொடங்கியது.
உலக வர்த்தக அமைப்பின் தலைவராக உள்ள இந்தோனேசிய வர்த்தக அமைச்சர் கீதா விர்ஜவான், துணைத் தலைவர்களான பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஸ்டீபன் கிரீன், ருவாண்டா தொழில் வர்த்தக அமைச்சர் பிரான்கோய்ஸ் கனிம்பா, பெரு வர்த்தக அமைச்சர் மகாளி சில்வா வெலார்தே ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித் துள்ளதாவது:
கூட்டம் நடைபெறவுள்ள அடுத்த சில நாள்களில் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு முக்கிய விவகாரங்களில் தீர்வு காண முன்வர வேண்டும். தலைமை இயக்குநர் ராபர்டோ அஸெவே தோவுடன் இணைந்து செயல் பட்டு, முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கோரிக்கை
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்தும் போது மானிய உச்ச வரம்பை மீற நேர்ந்தால், எந்தவிதமான அபராதமும் விதிக்கப்பட மாட்டாது என்ற வகையில், உலக வர்த்தக அமைப்பின் விவசாய ஒப்பந்த வரையறையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.
இது போன்று திருத்தம் எதையும் கொண்டு வரக்கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன
உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா சார்பில் மத்திய தொழில் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையிலான 30 பேர் குழு பாலி சென்றுள்ளது.
ஜிம்பாப்வே தொழில் வர்த்தக அமைச்சர் மைக் பிம்ஹாவை ஆனந்த் சர்மா செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜிம்பாப்வே அமைச்சர் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பிரேஸில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வர்த்தக அமைச் சர்களை ஆனந்த் சர்மா சந்தித்து பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT