Published : 12 Mar 2014 12:22 PM
Last Updated : 12 Mar 2014 12:22 PM

நேஹா கிர்பால் - இவரைத் தெரியுமா?

$ இந்தியா ஆர்ட் ஃபேர் மையத்தின் நிறுவனர் மற்றும் கண்காட்சி இயக்குநர்.

$ 2008-ல் தொடங்கி இதுவரை 5 கண்காட்சிகளை வெற்றிகரமாக நடத்தி இந்தியாவின் புகழை உலக அரங்கில் பறைசாற்றியுள்ளார்.

$ கற்பனைத் திறன் மிக்கத் துறையில் 28 வயதில் தொழில் முனைவோராக நுழைந்து சாதனை புரிந்தவர். இந்திய பாரம்பரிய கலை மற்றும் நவீன படைப்புகளை தனது கண்காட்சியில் புகுத்தியவர்.

$ இவர் நடத்திய 5 கண்காட்சிகளை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

$ இந்திய கலை, ஓவியம் உள்ளிட்டவற்றை இங்கிலாந்தில் பிரபலப் படுத்தியவர்.

$ தில்லி ஸ்ரீராம் கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், லண்டன் ஓவியக் கல்லூரியில் கற்பனைத் திறன் தொழில் படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சில காலம் தனியார் மக்கள் தொடர்பு நிறுவனத்திலும் பணி புரிந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x