Published : 16 Nov 2013 12:00 AM
Last Updated : 16 Nov 2013 12:00 AM
பல நாடுகளில் பயன்படுத்தக்கூடிய சர்வதேச ரோமிங் சிம் கார்ட் சென்னை யில் வெள்ளிக்கிழமை அறிமுகப் படுத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பயணம் செய்வோருக்கு உதவும் வகையில் சர்வதேச ரோமிங் சிம் கார்டை லைகா மொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச சிம் கார்டில் வாடிக்கை யாளர்கள் செலுத்திவரும் கட்டணத் தைவிட 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைவான கட்டணத்தில் இந்த சிம் கார்ட் மூலம் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியும்.
வெளிநாட்டுக்குச் செல்லும் இந்தியர்கள் அந்த நாட்டிலிருந்து ஒரு ரூபாய் செலவில் இந்தியாவில் உள்ள உறவினர்கள், நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியும். அலுவலக விஷயங்களையும் பரிமாறிக் கொள்ள முடியும். இந்த சிம் கார்டுக்கு வரும் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் இந்த சிம் கார்டுகளுக்கு வாடகை கிடையாது. முன் பணம் செலுத்தத் தேவையில்லை.
ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, போலந்து, டென்மார்க், நார்வே, ஸ்வீடன், அயர்லாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள் ளிட்ட 13 நாடுகளில் இந்த சிம் கார்டு மூலம் தொடர்பு கொள்ளலாம். இங்கிலாந்தின் செல்பேசி எண்ணைக் கொண்டிருக்கும் இந்த சிம் கார்டு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
சிறு, குறு, நடு த்தரத் தொழில்முனைவோர், வங்கிகள், நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள், உயர் கல்விபெறச் செல்லும் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் குறைந்த கட்டணத்தில் வேகமான இணைப்புத் திறனுடன் கூடிய இந்த சிம்கார்ட் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்று சிம்கார்டை அறிமுகப்படுத்தியுள்ள லைகா டெலிகாம் நிறுவன தலைமை செயல் அதிகாரி மிலிந்த் காங்லே தெரிவித்தார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் லைகா டெலிகாம் நிறுவனம் ரூ. 100 கோடியை இந்தியாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும் ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
சர்வதேச ரோமிங் கார்ட் அனைத்து விசா பரிசீலனை மையங்கள், சர்வதேச விமான நிலையங்கள், சென்ட்ரம் போரக்ஸ் எக்ஸ்சேஞ்சின் 700 கிளைகள் மற்றும் ஆக்சிஸ், யெஸ் வங்கிகளில் கிடைக்கும். இது தவிர 1800 103 6699 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் 24 மணி நேரத்தில் வாடிக்கையாளரின் வீட்டிற்கே சிம் கார்ட் அளிக்கப்படும் என்று நிறுவனத்தின் சி.ஓ.ஓ. பிரேமானந்தன் சிவசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT