Published : 23 Mar 2014 06:49 PM Last Updated : 23 Mar 2014 06:49 PM
ரிசர்வ் வங்கி அறிவிப்பால் பெடரல் வங்கி பங்கு 6.5% உயர்வு
ஃபெடரல் வங்கியில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது.
இதன் காரணமாக ஃபெடரல் வங்கி பங்குகளை வாங்கும் போக்கு அதிகமாக இருந்தது. வர்த்தகத்தின் இடையே 91.75 ரூபாய் அளவுக்கு அதிகபட்சமாக சென்றது.
வர்த்தகத்தின் முடிவில் 5.93 சதவீதம் உயர்ந்து 91.05 ரூபாயில் முடிவடைந்தது.
அந்நிய முதலீட்டாளர்கள் இந்த வங்கியில் 49 சதவீதம் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. இந்த கட்டுப்பாட்டை தளர்த்தி 74 சதவீதம் வரை முதலீடு செய்ய விதிகளை தளர்த்தியதுதான் இந்த ஏற்றத்துக்கு காரணம்.
மென்பொருள் சோதனைக்காக இந்திய பங்குச்சந்தையில் சனிக்கிழமை சிறப்பு வர்த்தகம் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்திருந்தாலும், இந்திய பங்குச்சந்தைகள் அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சிறிதளவு உயர்ந்து முடிந்தது.
வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 1 புள்ளி உயர்ந்து 21755 புள்ளியிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 1 புள்ளி உயர்ந்து 6494 புள்ளியிலும் முடிவடைந்தன.
பி.எஸ்.இ. மிட்கேப் குறியீடு 0.33 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 0.7 சதவீதமும் உயர்ந்தது. அந்நிய முதலீடுகள் இந்திய சந்தைக்கு தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த சிறப்பு வர்த்தகம் சனிக்கிழமை காலை 11.15 முதல் 12.45 வரை நடைபெற்றது.
WRITE A COMMENT