Published : 05 Dec 2013 12:00 AM
Last Updated : 05 Dec 2013 12:00 AM

Arbitrage - என்றால் என்ன?

Arbitrage

அன்னியச் செலாவாணி சந்தைகளின் விலைகளில் உள்ள இடைவெளியைப் பயன்படுத்தி எவ்வித நஷ்டம் இல்லாமல் arbitrage செய்யலாம்.

இதனை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். நியூயார்க் அன்னியச் செலாவணி சந்தையில் $ 1 = ரூ. 65 என்றும், மும்பை அன்னியச் செலாவணி சந்தையில் $ 1 = ரூ. 65.௦5 என்றால், இன்றைய துரித பணமாற்றும் முறையில் கோடிக்கணக்காக டாலரை நியுயார்க் சந்தையில் வாங்கி உடனடியாக மும்பை சந்தையில் விற்று ஒவ்வொரு டாலருக்கும் 5 பைசா சம்பாதிக்க முடியும்.

இவ்வாறு நியுயார்க் சந்தையில் டாலரை வாங்க வாங்க அங்கு மாற்று விகிதம் $ 1 = ரூ. 65 கொஞ்சம் கொஞ்சமாக உயரும். மாறாக மும்பை சந்தையில் டாலரை விற்க விற்க, அங்கு மாற்று விகிதம் $ 1 = ரூ. 65.௦5 குறையும்.

ஒரு நிலையில் இரு சந்தைகளில் மாற்று விகிதம் ஒரே அளவாக மாறும், அப்போது arbitrage நின்று போகும்.

Spot மற்றும் Forward மாற்று விகிதம்

எந்த ஒரு நேரத்திலும் இரண்டு மாற்று விகிதங்கள் இருக்கும். ஒன்று Spot மற்றொன்று Forward. அன்னியச் செலாவணியை உடனடியாக வாங்கவும் விற்கவும் உள்ள மாற்று விகிதம் Spot விகிதம். அதுவே எதிர்காலத்தில் வாங்கவும் விற்கவும் இன்றே விலையை நிர்ணயித்து ஏற்றுக்கொள்வது Forward விகிதம். தற்போது இன்று spot விகிதம் $1=ரூ65, ஆனால், ஒரு 30 நாள்கள் கழித்து ஒரு டாலரை ரூ 60.௦5 வாங்கவும் விற்கவும் இருவர் ஒப்புக்கொண்டு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டால், அது Forward விகிதம். இவ்வாறான ஒப்பந்தங்கள் மூலம் 30, 60, 90, 120 என பல காலங்களுக்கு Forward விகிதம் ஏற்படுத்தமுடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x