Published : 17 Sep 2013 12:21 AM
Last Updated : 17 Sep 2013 12:21 AM

பண வீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு

நாட்டின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 6.1 சதவீதமாக உயர்ந்தது. கடந்த ஆறு மாதங்களில் பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும். உணவுப் பொருள்களின் விலை 18 சதவீத அளவுக்கு உயர்ந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். ஜூலை மாதத்தில் பணவீக்கம் 5.79 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆண்டு இதேகாலத்தில் பணவீக்கம் 8.01 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் உணவுப் பொருள்களின் விலை 9.34 சதவீதமாக இருந்தது. இப்போது 18.18 சதவீதமாக (இரண்டு மடங்கு) உயர்ந்துள்ளது.

காய்கறிகளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை கடந்த ஆண்டை விட 244 சதவீதம் உயர்ந்துள்ளது.

முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலை 18.86 சதவீதம் உயர்ந்துள்ளது. அரசி விலை 20.13 சதவீதம் அதிகரித்துள்ளது. கோதுமை விலை 7.6 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x