Published : 13 Feb 2014 01:16 PM
Last Updated : 13 Feb 2014 01:16 PM
தமிழக பட்ஜெட் குறித்து ஃபிக்கி (Federation Of India Chamber Of Commerce and Industry) என்ன நினைக்கிறது என்று தெரிந்துகொள்ள ஃபிக்கியின் ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தியிடம் பேசினோம். தமிழக பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்து அவர் கூறியதாவது.
கூடிய விரையில் பொதுத்தேர்தல்கள் வர இருப்பதால் புதிய வரி விதிப்புகளோ கூடுதல் வரிகளோ இருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் பொதுவாக செய்ய வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன.
பருவ மழை பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்யாதது, தேவை இல்லாத சமயத்தில் பொழிவது, மணல் அள்ளுவது, ரசாயனங்கள் நீரில் கலப்பது மற்ற மாநிலங்களில் இருந்து தண்ணீர் கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல காரணங்களால் இந்த வருட கோடைக்காலத்தில் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் குடிநீரை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
குறுகிய கால தேவைகள் நீண்ட கால தேவைகள் என இரண்டாக பிரித்து அதற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
ஏற்கெனவே தூர்வாறும் பணிகள் நடந்துகொண்டிருந் தாலும், அரசும் இதற்கு நிதி ஒதுக்க வேண்டும். மேலும், பல பெரிய நிறுவனங்கள், சமூக சேவை செய்துவருகிறார்கள். அவர்களுடன் இணைந்து, இந்த பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் தண்ணீர் பிரச்சினையை ஓரளவுக்குச் சமாளிக்க முடியும்.
தண்ணீருக்காவது விரைவில் ஏதாவது ஒரு தீர்வை கண்டு பிடிக்காலாம். ஆனால் மின்சாரம் தட்டுப்பாடுக்கு உடனடியாக தீர்வு கண்டுபிடிக்க முடியாது. காற்றாலை உற்பத்தியாளர்களிடம் நிலவும் பிரச்சினைகளை சமாளித்து அதற்கான தீர்வை எட்டவேண்டும்.
சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இப்போது நான் சொல்வது பொதுமக்களுக்கு எதிரானது போல இருந்தாலும், அரசாங்கத் தின் நிதிநிலைமையை மேம்படுத்து வதற்கு உதவும். சொத்துவரியை உயர்த்தி வருமானத்தை அதி கரிக்கும் செயல்களில் ஈடுபடலாம்.
இறுதியாக திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் முறையை மாற்றி அமைக்கலாம். இப்போது இருக்கும் முறைகளால் பல திட் டங்கள் நடைமுறைப்படுத்தப் படாமல் இருக்கிறது. மேலும் பல இடைத்தரகர்கள் இதில் பணம் சம்பாதிக்கிறார்கள். அதனால் இ-கவர்னன்ஸ் முறையில் திட்டங் களுக்கு அனுமதி அளிக்கும்பட் சத்தில், இடைத்தரகர்கள் நீக்கப் படுவார்கள். புதிய திட்டங்களும் தமிழகத்துக்கு வரும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT