Published : 06 Nov 2013 12:38 PM
Last Updated : 06 Nov 2013 12:38 PM
நிதி உரிமைகள் (Financial Claims)
நிதி உரிமை என்பது ஒரு நிதி பத்திரம். இதில் ஒரு நபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்டத் தொகையை வட்டி/லாபம் என்று மாதம்தோறும்/வருடந்தோறும் தரவேண்டும், முதல் தொகையை (Principal, Market Vaule, Face Value) ஒரு கால முடிவில் (ஒரு வருடத்தில் அல்லது நிறுவனம் கலையும் போது) கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும். நிதி பத்திரங்கள் பங்கு (Shares/Equities/Stocks), டிபெஞ்சர் (Debenture) எனப்படும் பான்ட் (Bond) அல்லது நோட் (Note) என்றும் இருக்கும்.
உதாரணமாக, ஒரு சாதாரண கடன் பத்திரம், ஒரு குறிப்பிட்ட வட்டியை மாதம்தோறும் தருவதாகவும், முதல் பணத்தை குறிப்பிட தேதியில் தருவதாகவும் இருக்கும், அல்லது, வட்டி கொடுக்காமல் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட கால முடிவில் தருவதாக இருக்கும்.
ஒரு பங்கு பத்திரத்தில், ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும்போது அப்பத்திரம் மூலம் பெறப்பட்ட பங்கு எழுதப்பட்டிருக்கும். இதற்கு Face Value என்று பெயர். ஆனால் அம்முதலீட்டினால் அந்நிறுவனத்தின் செல்வம் உயர உயர பங்கு பத்திரத்தின் விலை உயரும். மேலும் வருடம்தோறும் லாபத்தின் ஒரு பங்கினை Dividend என்று பங்கின் உரிமையாளருக்கு கொடுப்பர். நஷ்டம் வந்தால் பங்கின் விலை குறையும். லாபம் வந்ததும் Dividend (ஈவுத் தொகை) கொடுக்காமல் மீண்டும் முதலீடு செய்தால் பங்கின் விலை உயரும். பங்குப் பத்திரத்தில் Face Value மட்டும் இருக்கும், Dividend பற்றியோ பங்கின் சந்தை விலை பற்றியோ எதுவும் இருக்காது.
இவ்வாறு, நிதி பத்திரங்கள் வெவ்வேறு தன்மைகளுடன் வருகின்றன. இதில் வட்டி, கால அளவு, பத்திரத்தின் சந்தை விலை என்பன மாறக்கூடியவை. நிதி பத்திரங்களை உருவாக்குபவர்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப அல்லது அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்ப அப்பத்திரங்கள் தரும் வருவாயும் மாறுபடும். இதனை ரிஸ்க் (Risk) என்பர், இதில் பலவகை ரிஸ்க் உண்டு, இதனை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
பல வகை நிதிப் பத்திரங்கள் இருப்பதை கூறினோம். இதற்கு வேறு ஒரு பொது பெயர் செக்யுரிடீஸ் (Securities). Securities Contracts Regulation Act (SCRA), 1956 இல் பல வகையான செக்யுரிடீஸ் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பேரம் பேசி எஸ்சேஞ்சில் வாங்கக்ககூடியவை. அவற்றை முதன்மை சந்தையிலோ, இரண்டாம் நிலை சந்தையிலோ வாங்கலாம்.
செக்யுரிடிஸின் தன்மைகள் பலவகைப்படும். வருவாய், ரிஸ்க், கால அளவு, சந்தைபடுத்தும் முறை, பணம் பெறுதலில் உள்ள எளிமை (Liquidity), வாங்கவும், விற்கவும், அவற்றை பற்றிய செய்திகளை தெரிந்து ஆலோசனைப் பெருவதற்கான செலவு (Transaction Cost), என பலவற்றைக் குறிப்பிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT