Published : 13 Feb 2014 01:14 PM
Last Updated : 13 Feb 2014 01:14 PM
ஸ்டேஷனரி பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஷாஜிஹாதா இன்கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவில் தடம் பதிக்கிறது. இந்நிறுவனம் திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தில் உள்ள இந்த ஆலை பள்ளி மாணவர்ளுக்கு மற்றும் அலுவலகத் துக்கு ஏற்ற ஸ்டேஷனரி பொருள்களைத் தயாரிக்கும்.
பேனா, கிரையான்ஸ், ஆயில் பேஸ்டல், ஜியோமெட்ரி பாக்ஸ் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாக நிறுவனத்தின் பொது மேலாளர் பிஜு ஒமன் தெரிவித்தார். இந்நிறுவனத் தயாரிப்புகள் ஆர்ட்லைன் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.
தமிழகத்தில் தொடங்கி இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நாட்டின் அனைத் துப் பகுதிகளிலும் தங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார். கடந்த 15 ஆண்டுகளாக இந்தி யாவில் செயல்பட்ட போதிலும், இங்கிருந்து பிற நாடுகளுக்கு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இப்போதுதான் உள்ளூர் சந்தையை இலக்காகக் கொண்டு பொருள்கள் தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாக நிறுவனத்தின் இயக்குநர் யாஸுஜி மோரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT